கருண் நாயருக்காக ரஹானேவை நீக்க முடியாது - கும்ளே திட்டவட்டம்

சென்னையில்  நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முச்சதம் அடித்து அசத்தியவர் கருண் நாயர். ரஹானே காயத்தால் அவதிப்பட்டதால், அவருக்கு மாற்றாக அந்தப் போட்டியில் களமிறங்கிய கருண் நாயர், அற்புதமாக ஆடினார்.  அந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, ரஹானே இந்திய அணிக்குத் திரும்பினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ரஹானே சொற்ப ரன்கள்தான் எடுத்திருந்தார். இதனால், கருண் நாயர்  பெங்களூர் டெஸ்ட்டில் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவாரா எனக் கேள்வி எழுந்தது. " ரஹானே, இந்தியாவுக்காக கடந்த இரண்டு வருடங்களாக நிறைய செய்திருக்கிறார். குறிப்பாக ,அயல்நாட்டு சுற்றுப்பயணங்களில் அசத்தல் ஆட்டம் ஆடியுள்ளார். எனவே, ரஹானே அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பே இல்லை. ரஹானேவுக்குப் பதிலாக கருண் நாயர் இந்த டெஸ்ட் போட்டியில் இடம் பெற மாட்டார். அதேசமயம், அணிக்கு ஐந்து பவுலர் தேவையா, நான்கு பவுலர் தேவையா என ஆலோசனைசெய்து முடிவுசெய்வோம். ஒருவேளை, அணிக்குக் கூடுதல் பேட்ஸ்மேன் தேவைப்பட்டால், கருண் நாயர் தேர்வுசெய்யப்பட வாய்ப்பிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார் பயிற்சியாளர் கும்ளே. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!