Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி தருமா இந்தியா? #IndvsAus

virat kohli vs australia

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. காலை 9.30 மணியில் இருந்து போட்டி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு, புனேவில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றியைச் சுவைத்தது. அபாரமான ஃபார்மில் இருந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வாஷ் அவுட் செய்யும் என கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த நிலையில், மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. 

இந்த நிலையில், இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க இருக்கிறது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியை ஜெயித்தால், தொடரை இழக்கும் சூழ்நிலையைத் தவிர்க்கலாம் என்பதால், முழு உழைப்பையும் கொட்டும் என எதிர்பார்க்கலாம். பெங்களூரு டெஸ்ட் போட்டியில், டாஸ் மற்றும் பிட்சின் தன்மையைப் பொறுத்து,  இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு பவுலருக்குப் பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அணிக்குள் நுழைவார் என சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி, அதே லெவனை களமிறக்கவுள்ளது. ஒன்றரை வருட தொடர் வெற்றி நிறுத்தப்பட்டுள்ளதால்,புதுத் திட்டங்களோடு விராட் கோலி, இந்திய அணியை வழிநடத்துவார்  என நம்பலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement