அஸ்வின் சுழலில் மிரண்டது ஆஸ்திரேலியா! இந்தியா அபார வெற்றி | India beats Australia in Second test match

வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (07/03/2017)

கடைசி தொடர்பு:15:46 (07/03/2017)

அஸ்வின் சுழலில் மிரண்டது ஆஸ்திரேலியா! இந்தியா அபார வெற்றி

பெங்களூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. அஸ்வின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

Ashwin

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடந்தது.  இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில்  276 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்து. புஜாரா 92, ரஹானே 52, ராகுல் 51 ரன்கள் எடுத்தனர்.  இதையடுத்து 188 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 112 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சுழல் ஜாலம் செய்தார். யாதவ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் 28 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில், இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க