டெஸ்ட் கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப்: ஏற்க மறுக்கும் பிசிசிஐ

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை கொண்டுவர ஐசிசி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, 2019-ம் ஆண்டு இதற்கான தகுதிப் போட்டிகளை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

BCCI

இதை முன்னிட்டு, ஐசிசி கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிசிசிஐ, உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் நடத்துவதில் விருப்பமில்லை எனக் கூறியுள்ளது. இதற்காக ஏற்கெனவே ஒரு திட்டவடிவம் தயாரிக்கப்பட்டு இருந்தது, அதை எதிர்த்த பிசிசிஐ, தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட திட்ட வடிவத்தையும் எதிர்த்துள்ளது.

குறிப்பாக, தற்போதைய சூழ்நிலைக்கு டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தேவையில்லை என்றும், அது தேவைப்படும்போது ஆதரிப்பதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!