வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (16/03/2017)

கடைசி தொடர்பு:16:40 (16/03/2017)

ஜோகோவிச்சை தோற்கடித்து ஃபெடரரை சந்திக்கும் கத்துக்குட்டி!

Nick Kyrgios

உலக டென்னிஸ் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நோவாக் ஜோகோவிச்சை, 21 வயதாகும் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ் (Nick Kyrgios), இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதையடுத்து, அவர் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் ஃபெடரரை சந்திக்க உள்ளார். ஃபெடரரும், நடாலை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நிக், ஜோகோவிச்சை 6-4, 7-6 (7-3) என்ற செட்களில் தோற்கடித்துள்ளார். 

போட்டி முடிந்த பின் நிக், 'இந்த வெற்றி மிகவும் திருப்தியளிக்கிறது. ஜோகோவிச்சுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் கடினமானதுதான். அவர் ஒரு சிறந்த சாம்பியன்' என்று கூறினார்.

ஜோகோவிச், 'சமீப காலமாக நான் தொடர்ச்சியாக போட்டிகளை ஜெயித்து வந்தேன். அது என்றாவது நின்றுதான் ஆக வேண்டும். இன்று அது நடந்தது வருத்தம் அளிக்கிறது.' என்று தெரிவித்துள்ளார்.