விஜய் ஹசாரே கோப்பை: இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது தமிழகம்!

விஜய் ஹசாரே கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி இன்று டெல்லியில் நடந்தது. இதில் பரோடா மற்றும் தமிழக அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பரோடா அணி 49.3 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேதர் தேவ்தர் 46 ரன்கள் எடுத்தார். தமிழகத்தின் ரவி ஶ்ரீனிவாசன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

Vijay Hazare Tamilnadu

இதையடுத்து களமிறங்கிய தமிழகம் அணி 47.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளில் 220 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 77 ரன்கள் எடுத்தார். கேப்டன் விஜய் சங்கர் 53, வாஷிங்டன் சுந்தர் 26 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்றுக்கு தமிழகம் முன்னேறியுள்ளது.

இதைத்தொடர்ந்து, இரண்டாவது அரையிறுதியில், பெங்கால் மற்றும் தோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றில் தமிழகத்துடன் மோதும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!