ஆஸ்திரேலியா 451 ரன்களில் ஆல் அவுட்!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 451 ரன்களில் ஆட்டமிழந்தது.

Jadeja

இந்தியா, ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட் ராஞ்சியில் நேற்று துவங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தனர். இதற்கிடையே ஃபீல்டிங்கின்போது ஏற்பட்ட காயத்தால், கேப்டன் விராட் கோலி மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக ரஹானே கேப்டன் பொறுப்பைக் கவனித்து வருகிறார்.  தற்போதுவரை கோலி, இந்த டெஸ்ட்டில் விளையாடுவது குறித்து தகவல்கள் இல்லை.

இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 451 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 178 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணியின் கேக்ஸ்வெல் 104 ரன்கள் எடுத்தார்.  இந்திய அணியின் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அஸ்வின் ஒரு விக்கெட் எடுத்தார்.

இதற்கிடையே இந்திய அணி முதல் இன்னிங்ஸை துவங்கி ஆடி வருகிறது. சற்று முன்வரை இந்திய அணி 4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ராகுல் 3, விஜய் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!