சதத்தைத் தவறவிட்ட முரளி விஜய்! இந்தியா நிதான ஆட்டம்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நடந்துவருகிறது. இந்த டெஸ்ட்டில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 451 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் சதமடித்தனர். இந்திய அணியின் ஜடஜா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

Muralivijay

இந்தியா, தனது முதல் இன்னிங்ஸை நேற்று துவங்கியது. நேற்றைய நாள் முடிவில், இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன், இந்தியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய முரளி விஜய், 84 ரன்களில் அவுட் ஆனார். புஜாரா 40 ரன்களுடன் களத்தில் உள்ளார்.  கமின்ஸ், ஓகீஃப் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவைவிட இந்திய அணி 258 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!