Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோலி அவுட்! பரபர ராஞ்சி டெஸ்ட்

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 6 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

Virat Kohli

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட், கடந்த 16-ம் தேதி துவங்கியது. இந்நிலையில், ஆஸ்திரலிய அணி பேட்டிங்கின்போது, பவுண்டரிக்குச் சென்ற பந்தைத் தடுத்த கேப்டன் கோலிக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, அவர் நேற்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்பதால், காயத்தில் இருந்து மீண்டு, பேட்டிங் செய்ய வருவார் என்று கூறப்பட்டது.

அவர், பேட்டிங் செய்வாரா... மாட்டாரா என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் முரளிவிஜய் அவுட் ஆன பிறகு, வழக்கம்போல அவர் களமிறங்கும் செகண்ட் டவுனிலேயே, பேட்டிங் செய்ய வந்தார் கோலி. ஆனால், அவர் 6 ரன்களிலேயே அவுட் ஆனார். சற்று முன் வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 66, ரஹானே 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close