வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (18/03/2017)

கடைசி தொடர்பு:18:17 (18/03/2017)

#CricketUpdates- புஜாரா சதம் விளாசல்- இந்தியா 360/6

Pujara

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழந்து 360 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130 ரன்கள் விளாசி தொடர்ந்து களத்தில் இருக்கிறார். முன்னர், தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் முரளி விஜய் அரை சதம் விளாசினர்.

Pujara

ஆஸ்திரேலியா, தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுண்ட்ரிக்குச் சென்ற பந்தை எகிறிப் பிடித்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பின்னர், களத்தில் இருந்து வெளியேறிய கோலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனார் கோலி, இந்த டெஸ்டில் விளையாடுவது கடினம் என்ற கூறப்பட்ட நிலையில், இன்று நான்காவது பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். இருந்தும், அவர் 6 ரன்கள் எடுத்தபோது கம்மின்ஸ் வீசிய பந்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ்ன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

நாளை நான்காவது நாள் ஆட்டம் தொடரவுள்ள நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியாவைவிட 91 ரன்கள் பின்தங்கியுள்ளன. இன்னும் இரண்டு அணிகளும் இரண்டாவது இன்னிங்ஸை கூட தொடங்காத நிலையில், இந்தப் போட்டி டிராவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 

India Vs Australia