Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புஜாரா இரட்டை சதம்! சாஹா சதம் ! வலுவான நிலையில் இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புஜாரா இரட்டை சதமடித்தார். சாஹா சதமடித்துள்ளார்.

Pujara, Saha

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நடந்துவருகிறது. இந்த டெஸ்ட்டில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 451 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் சதமடித்தனர். இந்திய அணியின் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் 67, விஜய் 82 ரன்கள் எடுத்தனர். முக்கியமாக சிறப்பாக விளையாடிய, புஜாரா இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில், இது புஜாரா அடிக்கும் மூன்றாவது இரட்டை சதம். அதேபோல், மறுமுனையில் சிறப்பாக விளையாடி வரும் சாஹா சதமடித்துள்ளார்.

குறிப்பாக, இந்தப் போட்டியில் மற்றொரு புதிய சாதனை படைத்துள்ளார் புஜாரா. அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார். அவர், இந்தப்போட்டியில் 525 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதற்குமுன் ராகுல் டிராவிட் ஒரு போட்டியில் 495 பந்துகளை எதிர்கொண்டதே அதிகபட்சமாக இருந்தது.

புஜாரா 202 ரன்களில் ஆட்டமிழந்தார். சற்றுமுன் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 534 ரன்கள் எடுத்துள்ளது. சாஹா 115. ரன்களுடன், ஜடேஜா 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் இந்தியா 84 ரன்கள் முன்னிலை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement