Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் ஹசாரே ட்ராஃபி: தமிழக அணி சாம்பியன்!

Tamilnadu cricket team

டெல்லியில் நடைபெற்ற விஜய் ஹசாரே ட்ராஃபி இறுதிப் போட்டியில்,  மேற்கு வங்க அணியை வீழ்த்தி, தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

விஜய் ஷங்கர் தலைமையிலான தமிழக அணியும், மனோஜ் திவாரி தலைமையிலான மேற்கு வங்க அணியும் இறுதிப்போட்டியில் மோதின. முதலில் பேட்டிங் செய்த தமிழகம், 47.2 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக், அதிகபட்சமாக 112 ரன்கள் எடுத்தார். 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு வங்க அணியின் பேட்ஸ்மேன்கள் யாருமே நிலைத்து ஆடாததால், 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதனால், 37 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றிபெற்று, விஜய் ஹசாரே ட்ராஃபியைக் கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் கூறுகையில், 'அணியின் சிறந்த முயற்சியால் ஆட்டத்தை வென்றோம். ஒரு மூத்த ஆட்டக்காரராக நான் பொறுப்பெடுத்து நன்றாக ஆடவேண்டியிருந்தது. நான் அவுட்டான முறை குறித்து எனக்கு வருத்தம் இருக்கிறது. ஆனால், போட்டியின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறினார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement