Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவின் அங்குர் மிட்டலுக்குத் தங்கம்!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அங்குர் மிட்டல் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Ankur Mittal

மெக்ஸிகோவின் அகாபுல்கா நகரில் ஷாட்கன் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் சோரவர் சிங், கியான் செனாய், பைரேன்தீப் சோதி ஆகியோர் முதல் சுற்றில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். மூன்றாவது நாளான இன்று இந்தியாவின் அங்குர் மிட்டல் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாகச் செயல்பட்டுவந்த அங்குர் 150-க்கு 138 புள்ளிகள் எடுத்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

இவர் ஏற்கெனவே கடந்த மாதம் டெல்லியில் நடந்த போட்டியில் வெள்ளி வென்றிருந்தார். இந்நிலையில், இன்று நடந்த போட்டியில் இவர், ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் வில்லிட்டைத் தோற்கடித்துள்ளார். ஜேம்ஸ் டெல்லியில் நடந்த துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றிருந்தார்.

மெக்ஸிகோவில் நடந்து வரும் இந்த உலகக்கோப்பையில் இந்தியாவின் சார்பில் மொத்தம் 9 பேர் கலந்துகொண்டுள்ளனர். இந்தப்போட்டியில், இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement