தர்மசாலா டெஸ்டில் கோலி விளையாடுவது சந்தேகம்! | Will take the call after fitness test, says Kohli

வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (24/03/2017)

கடைசி தொடர்பு:16:20 (24/03/2017)

தர்மசாலா டெஸ்டில் கோலி விளையாடுவது சந்தேகம்!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெங்களூரில் நடந்த மூன்றாவது டெஸ்டில், விராட் கோலி பவுண்டரிக்குச் சென்ற பந்தைத் தடுக்க முற்பட்டபோது, அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர் அந்தப் போட்டியில் பேட்டிங் செய்யும் அளவுக்கு உடற்தகுதியுடன் இருந்தார். தற்போது, அவருக்கு காயம் முழுவதுமாக குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, 'இன்று மாலை அல்லது நாளை எனக்கு உடற்தகுதி சோதனை செய்யப்படும். அதையடுத்து தான், நான் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும்' என்று கூறியுள்ளார்.