Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, நிதானமாக ஆடும் இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்தியா நிதானமாக ஆடிவருகிறது.

Pujara

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, தர்மசாலாவில் நடந்துவருகிறது. இதில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்திருந்தார். 

இதையடுத்து இரண்டாம் நாளில், இந்தியா நிதானமாக ஆடிவருகிறது. சிறப்பாக விளையாடிய ராகுல், அரை சதம் அடித்தார். ராகுல் 60, விஜய் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதேபோல, புஜாராவும் அரை சதம் அடித்தார். புஜாரா 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.  சற்று முன் வரை இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 19 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

முதல் இன்னிங்ஸில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 147 ரன்கள் பின் தங்கியுள்ளது. அந்த அணியின் ஹேசில்வுட் மற்றும் கமின்ஸ், தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இந்த டெஸ்ட் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் உள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement