Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் ஓய்வு! உருக்கமான பேட்டி

Shaun tait

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் டெய்ட், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக, 3 டெஸ்ட் போட்டிகள், 35 ஒருநாள் போட்டிகள் மற்றும் 21 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர், கடந்த 2005-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் போட்டியில் அறிமுகமானார். 

ஓய்வுபெறும் தகவலை அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டெய்ட், 'எனக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், வயது அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது. இப்போது வரும் இளைஞர்களுக்கு எதிராக போட்டி போடுவது கடினம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இவ்வளவு கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில், இது மிகவும் உணர்வுபூர்வமான முடிவுதான். முதல் முறை ஓய்வுபெறப்போகிறோம் என்பதை முடிவெடுத்த பின்னர், முதன்முதலில் விளையாட ஆரம்பித்தது ஞாபகம் வரும். என்னவோ, நேற்று விளையாட ஆரம்பித்தது போல தோன்றுகிறது. ஆனால், 15 ஆண்டுகள் ஓடிவிட்டன' என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement