Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுருண்டது ஆஸ்திரேலியா! 106 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி...!

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபியின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தர்மசாலாவில் இன்று நடைபெற்று வருகிறது.

நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து களத்தில் இருந்தது. இன்று காலை, தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, 332 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் வெறும் 32 ரன்களே ஆஸ்திரேலியாவை விட இந்தியா முன்னிலை பெற்றிருந்த நிலையில், ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது.

 

தொடக்கம் முதலே இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தது விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு பக்கம் மேக்ஸ்வெல் மட்டும் 60 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். இருப்பினும், மற்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடாததால் இரண்டாவது இன்னிங்ஸில், அந்த அணி 137 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய வீரர்கள் அஷ்வின், ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர். 

இன்னும் இரண்டு நாள்கள் இருக்கும் நிலையில், 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எண்ணத்தோடு இந்தியா களம் இறங்கவுள்ளது. 

இந்த, டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில், இந்தப் போட்டியை வெல்லும் அணி தொடரையும் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement