‘டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சி...’ - நெகிழும் ஜடேஜா

ravindra jadeja

கடைசியாக, ஐசிசி வெளியிட்ட பௌலர்களுக்கான தர வரிசைப் பட்டியலில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர், ரவீந்திர ஜடேஜா தான் முதல் இடத்தில் இருந்தார். அவர், அஷ்வினை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, முதல் இடத்தைப் பிடித்தார்.

அதற்கு முக்கியக் காரணம், ஜடேஜாவின் தற்போதைய ஃபார்ம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இந்திய கிரிக்கெட் அணி தற்போது விளையாடிவரும் பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபியின் நான்கு போட்டிகளில், ஜடேஜா எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 25.

இந்தத் தொடரில், ஆல்-ரவுண்டராகவும் ஜொலித்த ஜடேஜாவுக்கு, தொடர் நாயகன் விருது கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இந்நிலையில், 'டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது மிகுந்த மகழ்ச்சியைத் தருகிறது. இப்போது, அனைத்து வகை கிரிக்கெட்டுக்கும் நான் பொருத்தமானவன் என்ற எண்ணத்தில் அதிக நம்பிக்கை இருக்கிறது.

அணியின் மிகப் பொறுப்பு மிக்க வீரர் என்று என்னை மக்கள் கூறுவதும் மனநிறைவைத் தருகிறது. ஆட்ட நாயகனாக அல்லது தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்படுவதை விட, அணியின் வெற்றிக்கு நான் உறுதுணையாக இருப்பதையே மிகப் பெரிய சாதனையாக நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார், ஜடேஜா. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!