ரஹானே அதிரடி... இந்தியா அபார வெற்றி..!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி-யின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, தர்மசாலாவில் நடைபெற்றது. முதல் மூன்று போட்டிகளில்... தலா ஒரு போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற்றன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து, கடைசிப் போட்டியில் வெற்றிபெற்றால், கோப்பையை கைபற்றலாம் என்ற முனைப்போடு இரு அணிகளும் ஆட்டத்தைத் தொடங்கின.

நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 300 ரன்கள் எடுத்தது. அடுத்ததாகக் களம் இறங்கிய இந்திய அணி, 332 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. 32 ரன்களே லீடாக இருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை நம்பிக்கையுடன் ஆரம்பித்தது, ஆஸ்திரேலியா. ஆனால், இந்திய பௌலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா. இதனால், 106 ரன்கள் எடுத்தால் தொடரை வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, இரண்டு விக்கெட் இழந்த நிலையில், நிர்ணயித்த இலக்கைக் கடந்து, போட்டியையும் தொடரையும் வென்றது. இந்திய கேப்டன் ரஹானே, கடைசி இன்னிங்ஸில் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து, அணியை விரைவாக வெற்றி நோக்கி இட்டுச் சென்றார். நிதானமாக ஆடிய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல், அரை சதம் கடந்தார். 24 ஓவர்களில் இலக்கைக் கடந்து, 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது இந்தியா. இந்தப் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!