வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (28/03/2017)

கடைசி தொடர்பு:09:17 (29/03/2017)

இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, தர்மசாலாவில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. ஏற்கெனவே நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில், தலா ஒரு டெஸ்ட்டில் இரு அணிகளும் வெற்றிபெற்றிருந்தன. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. நான்காவது டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி, இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.  

இந்திய அணி வீரர்கள்


இந்திய அணிக்கு இது ஏழாவது தொடர் வெற்றி ஆகும். இதுவரை இலங்கை, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்தியுள்ளது. சர்வதேச டெஸ்ட் அரங்கில், ’நம்பர் ஒன்’ இடத்தை இந்திய அணி தக்க வைத்துக்கொண்டது. முதல் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு, ஐசிசி சார்பாக ஒரு மில்லியன் டாலர். அதாவது, இந்திய மதிப்பில் 6.51 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஐ.சி.சி. சார்பாக, இந்திய அணி கேப்டன் கோலியிடம் கோப்பையும் 6.51 கோடி ரூபாய்க்கான காசோலையும் கவாஸ்கர் வழங்கினார்.   

இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 லட்சம் வழங்குவதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. அதேபோல தலைமைப் பயிற்சியாளருக்கு ரூ.25 லட்சம், மற்ற ஊழியர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.