வெளியிடப்பட்ட நேரம்: 06:26 (29/03/2017)

கடைசி தொடர்பு:18:45 (05/04/2017)

ஐபிஎல் துவக்கப் போட்டியை மிஸ் செய்கிறார் கோலி!

10-வது ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி, பெங்களூரு அணி ஆடும் முதல் போட்டியில் ஆடுவது சந்தேகமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிகளில் அடைந்த காயம் முழுமையாகக் குணமடையாத நிலையில், இன்னமும் ஓய்வு தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. சென்ற தொடரில், கோலி 973 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து ஒரே ஒரு போட்டியைத்தான் கோலி மிஸ் செய்து இருந்தார். ஐபிஎல் போட்டிகளுக்காகத்தான் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடாமல் இருந்தார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாட்ச் கூறியிருந்தார்.