ஆசிய போட்டி: இந்திய கபடி அணிக்கு சாதனைத் தங்கம்! | ஆசிய போட்டி: இந்திய ஆடவர் கபடி அணிக்கு சாதனைத் தங்கம்!

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (26/11/2010)

கடைசி தொடர்பு:00:00 (26/11/2010)

ஆசிய போட்டி: இந்திய கபடி அணிக்கு சாதனைத் தங்கம்!

%3Cp>குவாங்சு, நவ.26,2010

 

ஆசிய விளையாட்டில் தொடர்ந்து, 6-வது முறையாக தங்கம் வென்று இந்திய ஆடவர் கபடி அணி புதிய சாதனை படைத்தது.

ஆசிய விளையாட்டுகளில் கபடி அறிமுகமானதில் இருந்து, இந்திய ஆடவர் அணி தான் இதுவரை தங்கப் பதக்கத்தை தொடர்ந்து கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய இறுதிப் போட்டியில், இந்திய ஆடவர் கபடி அணி 37-20 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானை வென்றது. இது, 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற 12வது தங்கமாகும்.

முன்னதாக, மகளிர் கபடி போட்டியில் இன்று இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. 
 
ஆசிய விளையாட்டின் மகளிர் கபடி இறுதிப் போட்டி இந்தியா - தாய்லாந்து அணிக்கு இடையே இன்று நடைபெற்றது.

இதில், இந்திய மகளிர் கபடி அணி 28-14 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.

ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் 17-7 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியிலும் இந்திய வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close