வெளியிடப்பட்ட நேரம்: 13:29 (01/04/2017)

கடைசி தொடர்பு:09:32 (01/04/2017)

மியாமி ஓப்பன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரர்

federer

மியாமி ஓப்பன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு, முன்னிலை வீரரான ரோஜர் ஃபெடரர் முன்னேறியுள்ளார். அமெரிக்காவின், மியாமி நகரில் நடைபெற்றுவரும் இந்த டென்னிஸ் போட்டி, உலகளவில் டென்னிஸ் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்று. 

தர வரிசையில் நான்காம் இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர், காலிறுதிப் போட்டியில், செக் குடியரசு வீரரான தாமஸ் பெர்டிச்சை, 6-2, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். பின்னர், அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் கிரியோஸுடன் மோதினார் ஃபெடரர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இருவரும் தங்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்தி விளையாடினர். இறுதியில், 7-6, 6-7, 7-6 என்ற செட்களில் கிரியோஸை போராடி வீழ்த்தினார். இதன்மூலம், மியாமி ஓப்பன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஃபெடரர்.