மியாமி டென்னிஸ்: ஹிங்கிஸ் இணையை வென்று இறுதிச்சுற்றில் சானியா இணை! | sania-strycova in Miami finals

வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (01/04/2017)

கடைசி தொடர்பு:14:13 (01/04/2017)

மியாமி டென்னிஸ்: ஹிங்கிஸ் இணையை வென்று இறுதிச்சுற்றில் சானியா இணை!

மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில்... மகளிருக்கான இரட்டையர் பிரிவில், சானியா- ஸ்ட்ரைகோவா இணை, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

sania


அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் நடைபெற்றுவரும் மியாமி ஓப்பன் டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா- செக் குடியரசின் ஸ்ட்ரைகோவா இணை, அரையிறுதிப் போட்டியில் சான்- ஹிங்கிஸ் இணையரை எதிர்த்து விளையாடியது. இதில், சானியா இணை முதல் செட்டை 6-7 எனத் தோற்றாலும், அடுத்தடுத்த செட்களில் 6-1, 10-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.