ஐ.பி.எல் 2017- காயம் காரணமாக இந்திய வீரர்களில் யார் இன், யார் அவுட்

IPL

2017-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் வரும் 5-ம் தேதி முதல் தொடங்குகின்றன. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், சில இந்திய வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமானது. 

இந்நிலையில் பி.சி.சி.ஐ, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் காயம் குறித்தும், அவர்களில் யாரெல்லாம் ஐ.பி.எல் போட்டியில் விளையாட மாட்டார்கள் போன்ற விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, இன்னும் இரண்டு வாரம் கழித்து முடிவு எடுக்கப்படுகிறது.

தொடக்க வீரரான லோகேஷ் ராகுலுக்கு, இடது தோள்பட்டையில் ஏற்பட்டிருக்கும் காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. எனவே, அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினுக்கு தொடைப்பகுதியில் உண்டாகியுள்ள வலி காரணமாக அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அவர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடமாட்டார்.

பேட்ஸ்மேன் முரளி விஜய்க்கு, வலது கைக்கு சிகிச்சை தேவைப்படுவதால், அவரும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையட முடியாது.

ஆல்-ரவுண்டர் ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சளர் உமேஷ் யாதவ், ஆகியோருக்கு இரண்டு வாரம் ஓய்வு எடுக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்கள், ஐ.பி.எல் போட்டிகளின் பிற்பகுதியில் விளையாட ஆரம்பித்து விடுவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!