மீண்டும் பி.வி. சிந்து, கரோலினா மரின் ஃபைனல்!

இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில், பி.வி. சிந்து, சாய்னா நேவால் மோதினர். இதில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

PV Sindhu

இதையடுத்து, அரையிறுதிப் போட்டியில், பி.வி. சிந்து மற்றும் தென் கொரியாவின்  சங் ஜி யு இன்று மோதினர். இதில் முதல் செட்டை சிந்து கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சங் ஜி கைப்பற்றி சிந்துவுக்கு டஃப் பைட் கொடுத்தார். 

மூன்றாவது செட்டில் அனல் பறந்தது. ஆனால், விட்டுக் கொடுக்காத சிந்து மூன்றாவது செட்டையும் கைப்பற்றினார்.

இதனையடுத்து, 21-18, 14-21, 21-14 என்ற செட் கணக்குகளில் சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப் போட்டியில் அவர் ஒலிம்பிக் தங்கப் பதக்க சாம்பியன் கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.

ஏற்கெனவே இருவரும் மோதிய ரியோ ஒலிம்பிக் இறுதிப்போட்டி, க்ளாசிக்காக அமைந்த நிலையில், தற்போது, இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பைனலிலும், இருவரும் மோத உள்ளனர். இந்தப் போட்டி நாளை நடக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!