வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (05/04/2017)

கடைசி தொடர்பு:10:59 (05/04/2017)

கோலாகலத்துடன் இன்று தொடங்குகிறது ஐபிஎல்! முதல் நாளில் சன்ரைசர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்

2017-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இரவு  எட்டு மணிக்கு தொடங்க உள்ள முதல் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

IPL

டெல்லி, மொஹாலி, மும்பை, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தமாக 60 போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு, தமிழ்நாட்டில் மிகுந்த வரவேற்பு இருந்துவந்தது. ஆனால், 2013-ம் ஆண்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி, சூதாட்டம்குறித்து தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை அளித்தது. அறிக்கையின் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் இல்லாதது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லாததன் காரணமாக, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் ஏதும் நடத்தப்படவில்லை. இன்று நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், நடிகை எமி ஜாக்சன் நடனம் ஆடுகிறார்.