வெளியிடப்பட்ட நேரம்: 22:21 (05/04/2017)

கடைசி தொடர்பு:22:24 (05/04/2017)

தொடங்கியது கிரிக்கெட் திருவிழா! முதல் போட்டியில் ஐதராபாத் அணி அதிரடி!

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள், இந்திய அளவில் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் கூட்டணியில் பிரமாண்டமாக ஆரம்பித்தது ஐபிஎல். இன்று 10-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஐதராபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் பெங்களூரூ அணியும் 2016-ம் ஆண்டின் சாம்பியன் ஐதராபாத் அணியும் விளையாடி வருகின்றன.

கோலகலமான துவக்க விழாவுடன் தொடங்கிய ஐபிஎல்-ன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஐதரபாத் டேவிட் வார்னர் தலைமையிலும், பெங்களூரூ அணி ஷேன் வாட்சன் தலைமையிலும் களம் இறங்கினர்.

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் அதிகபட்சமாக யுவராஜ் சிங் 27 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். மேலும், ஹென்ரிக்கேஸ் யுவராஜுக்கு பக்கபலமாக இருந்த அரை சதம் விளாசினார்

இதைத் தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பெங்களூரூ அணி ஆடி வருகிறது. 

நன்றி: BCCI