மலேசிய ஓப்பன் பேட்மின்டன் - இந்தியாவுக்கு இரட்டைச் சோகம்!

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து இருவரும், நேற்றைய மலேசிய ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் தோல்வி அடைந்தனர். 

கடந்த ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர், பி.வி.சிந்து. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்திய ஓப்பன் பேட்மின்டன் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இவர், நேற்று நடந்த மலேசிய ஓப்பன் பேட்மின்டன் போட்டியில், சீன வீராங்கனை சென் யுஃபெய் உடன் மோதினார். இதில், 18-21, 21-19, 21-17 என்ற செட்களில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்து, தொடரின் முதல் சுற்றுடன் வெளியேறினார். 

இதேபோல  மற்றொரு போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியுடன் மோதினார். இதில், 19-21, 21-13 21-15 என்ற செட்களில் சாய்னா தோல்வி அடைந்தார். 

இந்தியாவின் இரண்டு நம்பிக்கை நட்சத்திரங்களும், மலேசிய ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறியது, ரசிகர்களுக்கு இரட்டைச் சோகத்தை உண்டாக்கியது. ஆண்கள் பிரிவில்... இந்திய வீரர் அஜய் ஜெயராம், சீன வீரர் கியோ பின் என்பவரை முதல் சுற்றில் வென்றுள்ளார் என்பது ஆறுதல். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!