வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (06/04/2017)

கடைசி தொடர்பு:13:22 (06/04/2017)

டேவிஸ் கோப்பையில் லியாண்டர் பயஸ் அவுட், போபண்ணா இன்!

டேவிஸ் கோப்பையில், இந்திய அணியில் இருந்து லியாண்டர் பயஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக போபண்ணா களமிறங்குவார் என  மகேஷ் பூபதி தெரிவித்துள்ளார்.

Leander Paes

உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர், பெங்களூருவில் நாளை துவங்குகிறது. இந்தப் போட்டி, வரும் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடரில்,  லியாண்டர் பயஸ் நீக்கப்பட்டுள்ளார்; அவருக்குப் பதிலாக போபண்ணா களமிறங்குவார் என  இந்திய அணியின்  கேப்டன் மகேஷ் பூபதி தெரிவித்துள்ளார். இரட்டையர் பிரிவில், ஶ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து போபண்ணா விளையாடுவார். போபண்ணா, தர வரிசையில் 23-வது இடத்தில் உள்ளார். 

ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன், ப்ரஜ்னேஷ் குணேஸ்வரன் களமிறங்குகின்றனர். யூகி பாம்ரிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக ப்ரஜ்னேஷ் களமிறங்க உள்ளார். போபண்ணா, ஶ்ரீராம் பாலாஜி இணை, உஸ்பெகிஸ்தானின் ஃபரூக் தஸ்தோவ், சஞ்சீவ் பேஸிவை எதிர்கொள்கின்றனர்.