ஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா உல் ஹக்

misbah

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென பிரத்யேக இடம் பிடித்தவர் மிஸ்பா உல் ஹக். தன் நேர்த்தியான ஆட்டத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப்போட்ட மிஸ்பா, தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் மிஸ்பா. 

43 வயதாகும் மிஸ்பா, 2011-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்து வருகிறார். டெஸ்ட் அணியை சிறப்பாக வழி நடத்திய மிஸ்பா, ஐசிசி பட்டியலில் பாகிஸ்தான் அணி சிறந்த இடத்துக்கு முன்னேற காரணமாக இருந்தவர். இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஏப்ரல் 21-ம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் தொடருக்குப் பின் ஓய்வு பெற உள்ளார் மிஸ்பா-உல்-ஹக்.

தனது ஓய்வு பற்றி பேசிய மிஸ்பா, 'எனக்கு எந்தவிதமான அழுத்தமும் தரப்படவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனுக்கு என் முடிவை தெரிவித்துவிட்டேன். என் கிரிக்கெட் பயணத்தை சிறப்பாக முடிக்க முயற்சி செய்வேன்' என்றார். 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் மிஸ்பா-உல்-ஹக். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!