உலகத் தரவரிசையில் இந்திய கால்பந்து அணி அதிரடி முன்னேற்றம் | India ranks No.101 in FIFA rankings: highest over the past two decade

வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (06/04/2017)

கடைசி தொடர்பு:17:56 (06/04/2017)

உலகத் தரவரிசையில் இந்திய கால்பந்து அணி அதிரடி முன்னேற்றம்

சர்வதேச கால்பந்துக் கழகம் வெளியிட்டுள்ள ஃபிபா தரவரிசைப் பட்டியலில் இந்திய கால்பந்து அணி 101-ம் இடம் பிடித்து அபார சாதனை நிகழ்த்தியுள்ளது.

foot ball team


உலக கால்பந்து தரவரிசைப் பட்டியலை சமீபத்தில் ஃபிபா வெளியிட்டது. இதில், இந்திய அணி 132-ம் இடத்திலிருந்து 31 இடங்கள் முன்னேறி 101-ம் இடம் பிடித்துள்ளது. இந்திய கால்பந்து வரலாற்றில் 20 வருடமாக எட்ட முடியாத இடத்தை தற்போதைய இந்திய அணி எட்டியுள்ளது.

மேலும், இந்திய கால்பந்து அணி ஆசிய அளவில் 11-ம் இடம்பிடித்தும் சாதித்துள்ளது. தொடர்ந்து வெற்றிப் படிகளில் ஏறி வரும் இந்திய அணி அடுத்ததாக 2017 ஜூன் 7-ம் தேதி லெபனானுக்கு எதிராக விளையாடவுள்ளது.