Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.பி.எல்லின் ஜாலி, கேலி, கலாய் தருணங்கள்! - ஒரு ரீவைண்ட் #IPLFun

ஐ.பி.எல் - வாட்டி எடுக்கும் கோடையிலிருந்து கிரிக்கெட் ரசிகர்களை ரிலாக்ஸ் பண்ணும் சம்மர் ட்ரீட்! தினமும் மேட்ச்சுகள், அதிரடிகள் என இரண்டு மாத கோலாகல திருவிழா. பறக்கும் பந்துகள், விளாசும் வீரர்கள், ஜிகுஜிகு ஸ்டேடியங்கள் போன்றவை தாண்டி ஐ.பி.எல்லை எல்லோரும் காண்பதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. அது - களத்தில் நடக்கும் ஜாலி கேலி கலாட்டா. முறைப்பும் விறைப்புமாய் கிரிக்கெட் பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு பாங்ரா ஆடும் கில்கிறிஸ்ட்டும், வம்பு இழுக்கும் அம்பயர்களும் ரொம்பவே புதுசு. அப்படி இதுவரை களத்தில் நடந்த சில கலாட்டா தருணங்கள் இவை!

'போட்டுத் தாக்கு' பிராவோ :

 

சந்தேகமே இல்லை, கடைசியில் இறங்கி சிக்ஸ் அடிப்பதாகட்டும், பாய்ந்து பாய்ந்து கேட்ச் பிடிப்பதாகட்டும், ஸ்டம்ப்பை தெறிக்கவிட்டு டான்ஸ் ஆடுவதாகட்டும் மொத்த ஐ.பி.எல் சீசனின் சூப்பர் ஸ்டார் பிராவோ தான். பரபர க்ளைமாக்ஸ் கட்டங்களிலும் கூலாய் டான்ஸ் ஆடும் சேட்டை; சான்ஸே இல்லை. பொல்லார்டை வம்புக்கு இழுத்து அவுட்டாக்கி 'போ ப்ளைட் ஏறி ஊருக்கு' என வழியனுப்பி வைக்கும் வீடியோ செம வைரல். இந்த சீசனில் காயம் காரணமாக சில ஆட்டங்களில் ஆட மாட்டார் என்பதால் கலகலப்பு கம்மிதான்.

'வருது வருது விலகு விலகு ':

 

பிளேயர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல, சில சமயங்களில் வேறு சில ஜீவராசிகளாலும் கச்சேரி களை கட்டும். 2009-ல் மும்பை - சென்னை ஆட்டத்தின்போது மைதானத்திற்குள் ஒரு கருப்பு நாய் நுழைந்துவிட, அதைப் பிடிக்கப் பாய்வார்கள் செக்யூரிட்டிகள். எல்லாருக்கும் டேக்கா கொடுத்து நாய் எஸ்கேப்பாகிக்கொண்டே இருக்கும். பிடிக்கப் பாய்ந்து புல்லைக் கவ்வியவர்கள் பிரெட், பிஸ்கெட் கொடுத்து ஐஸ் வைப்பார்கள். நைஸாக வந்து லபக்கிவிட்டு திரும்ப எஸ்கேப்பாகும். கடைசியில் டயர்டாகி அதுவாகவே வெளியேற, சிரிப்போடு ஆட்டத்தை தொடர்வார்கள்.

நூலிழையில் மிஸ்ஸாகிடுறது : 

 

2009- ஐ.பி.எல்லில் சென்னையும் டெக்கான் சார்ஜர்ஸும் மோதிய ஆட்டம் அது. நான்கு விக்கெட்களை பறிகொடுத்து தள்ளாடிக்கொண்டிருக்கும் டி.சி அணி. பவுலர் ஜகடி, பந்தை கோட்டை விட ஓவர் த்ரோவில் இரண்டாவது ரன் ஓடப் பார்ப்பார் ஸ்மித். மறுமுனையில் பேட்ஸ்மேன் மறுத்துவிட, 'சரி எப்படியும் ரன் அவுட்தான்' என நின்றுவிடுவார் ஸ்மித். திரும்பவும் பந்தைக் கோட்டைவிடுவார் ஜகடி. அதை பொறுக்கி எடுத்து எறியும்போது மறுபடியும் ஜகடி சொதப்ப, 'யாரு சாமி இவன்?' என மிரண்டு பார்ப்பார் தோனி. தட் நூலிழைல கரடி மிஸ்ஸான கதை. வீடியோ பாருங்க மக்களே!

ஓடும் சிங்... விடாத கெய்ல் :

 

யுவராஜ் டெல்லி அணியில் இருந்த நேரம் அது. பெங்களூருக்கு எதிரான போட்டியின்போது மழை வர, ஃபீல்டிங்கில் டெல்லி வீரர்கள் பெவிலியனுக்கு ஓடுவார்கள். யுவராஜ் மட்டும் நிதானமாய் நடக்க, அவரை பேட்டை வைத்து, 'ஓடு ஓடு வீட்டுக்கு' எனத் துரத்துவார் கடோத்கஜன் கெய்ல். 'இதெல்லாம் எங்களுக்குள்ள ஒரு விளையாட்டு' என இருவரும் சிரித்துக்கொண்டே ஓடி மறைவார்கள்.

பிம்பிலிக்கா பிலாப்பி :

 

பில்லி பெளடன், ரூடி கோர்ட்சன் போன்ற அம்பயர்களுக்கு ரசிகர்கள் ஏராளம். விக்கெட் அறிவிக்க ரூடி மெதுவாக கை உயர்த்தும் 'ஸ்லோ டெத்' முறை உலக ஃபேமஸ். 2010-ல் டெல்லி - கொல்கத்தா மோதிய போட்டியில் கொல்கத்தா அணியின் பவுலர் டிண்டா கேட்ச் அப்பீல் செய்வார். குறுகுறுவென அவரைப் பார்க்கும் ரூடி விக்கெட் காண்பிக்க வருவதுபோல் கையை உயர்த்தி சட்டென பாக்கெட்டில் விட்டுக்கொண்டு 'மாமா பிஸ்கோத்து' என்பார். கங்குலி, டிண்டா என மொத்த டீமிற்கும் பல்ப் எரியும்.

வாயை மூடிப் பேசவும் :

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் பிளேயர்கள் எல்லாம் கடைசி பெஞ்ச் மாணவர்களைப் போல. அடிக்கடி ஏதாவது சேட்டை செய்துகொண்டே இருப்பார்கள். அதில் பொலார்டும் அடக்கம். பெங்களூருக்கெதிரான ஆட்டத்தில் கெய்லை ஜாலியாய் வம்புக்கு இழுப்பார் பொலார்ட். அதற்கு நடுவர்கள் ஆட்சேபனை தெரிவிக்க, விறுவிறுவென போய் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு வருவார். கமென்ட்ரி பாக்ஸ் தொடங்கி கார் பார்க்கிங்கில் இருந்தவர்கள் வரை விழுந்து விழுந்து சிரிப்பார்கள். பார்த்து என்ஜாய் பண்ணுங்க மக்களே!

- நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement