Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐபிஎல்: ஸ்டீவன் ஸ்மித் அதிரடியில் வெற்றியைத் தட்டியது புனே!

ஐபிஎல் 10-வது சீசனின் இரண்டாவது போட்டியில், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான புனே அணி வீழ்த்தியது. 

நேற்று தொடங்கிய ஐபிஎல் கொண்டாட்டத்தின் இரண்டாவது போட்டி, புனேயில் நடந்தது. டாஸ் வென்ற புனே அணி, ஃபீல்டிங்கை தேர்வுசெய்தது. பட்லர் 38, ரானா 34 மற்றும் கடைசிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 35 ரன்கள் விளாச, மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களுக்கு 184 ரன்களைக் குவித்தது. புனே அணியின் இம்ரான் தாஹி,ர் சிறப்பாகப் பந்து வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

185 ரன்களை இலக்காகவைத்து சேசிங் செய்த புனே அணியின் தொடக்க வீரர் அகர்வால், 6 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். எனினும், மற்றொரு தொடக்க வீரரான ரஹானே, அதிரடி காட்டினார். பவர் ப்ளே ஓவரில் மட்டும் 41 ரன்களைக் குவித்த ரஹானே, 34 பந்துகளில் 60 ரன்களை எடுத்து, புனே அணியின் ஸ்கோரை சூப்பராக உயர்த்தினார். இவருக்கு இணையாக, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக ரன்களை விளாசினார். கடைசி ஓவரில் புனேயின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது மற்றும் 5-வது பந்துகளை அடுத்தடுத்து சிக்ஸருக்கு விளாசினார். 19.5 ஓவரில்  3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களுடன் வெற்றியைத் தட்டியது. 54 பந்துகளில் 84 ரன்களை எடுத்து, ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement