Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியத் தடகள விளையாட்டுகளுக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் நியமனம்

இந்தியத் தடகள விளையாட்டுகளுக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடகள வீரர்களை மேம்படுத்தவே, வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை நியமித்துள்ளதாக விஜய் கோயல் கூறியுள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்ய நாட்டுப் பயிற்சியாளர்களை நியமித்துள்ளது, இந்திய விளையாட்டுத்துறை.

atheletes

2016 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட இந்தியா, இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றன. மகளிர் பேட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கமும், மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலமும் வென்றனர். இதையடுத்து, இந்தியாவின் விளையாட்டு துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 'சர்வதேசப் போட்டிகளில் வெல்லும் அளவுக்கு போதிய வசதிகள் இந்தியாவில் செயல்படுத்தப்படவில்லை. அனுபவமற்ற பயிற்சியாளர்களை நியமிக்கிறார்கள்' என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து, சர்வதேச வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை நியமித்துள்ளது, இந்தியா விளையாட்டுத்துறை. இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கூறும்போது, 2020 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக தடகள வீரர்களை மேம்படுத்த, வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை நியமித்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், சர்வதேசப் போட்டிகளில் வெல்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் சாதனங்களும் முறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய விளையாட்டுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement