Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.பி.எல்லின் ஜாலி, கேலி, கலாய் தருணங்கள்! ஒரு ரீவைண்ட் - பார்ட் 2 #IPLFun

ஐ.பி.எல்லின் ஜாலி கேலி தருணங்கள் சிலவற்றை முன்பே பார்த்தோம். ஒரு சீசனுக்கே ஐம்பது நாள்கள் நடக்கும் கிரிக்கெட் திருவிழா அது. அப்படி இருக்க, குறைந்தது இரண்டு பாகங்களாவது அதைப்பற்றி எழுதித்தானே ஆக வேண்டும். ஆகவே மக்களே... இது ஐ.பி.எல்லில் நடந்த ஜாலி கேலி தருணங்கள் பார்ட் 2!

'கில்லி' டான்ஸ் :

களத்தில் கில்கிறிஸ்ட் நிஜமாகவே கில்லிதான். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அவர் தொட்ட பந்தெல்லாம் சிக்ஸ். ஆனால் மும்பைக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் அவருக்கு வேறு திட்டங்கள் இருந்தன. ஆறு பந்துகளில் 50 ரன்கள் எடுக்க வாய்ப்பே இல்லை என்பதால் க்ளவுஸைக் கழற்றிவிட்டு பவுலிங் செய்ய வந்தார் கில்லி. அவர் பவுலிங் போடுவதைப் பார்ப்பதெல்லாம் எம்.எல்.ஏ-வை தொகுதிக்குள் பார்ப்பது போல. முதல் பந்திலேயே ஹர்பஜனின் விக்கெட். குஷியில் கங்கணம் ஆடுவது, உருண்டு புரள்வது என ரசிகர்கள் பார்த்தது வேற லெவல் கில்லியை. 

நமஸ்தே சாப் :

 

2015-ல் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டம் அது. ஸ்கூலை கட் அடித்துவிட்டு வந்த குழந்தை போல இருந்த பெங்களூரின் சர்ப்ராஸ் கான் கடைசி நேரத்தில் அடி வெளுத்து 45 ரன்கள் குவிக்க, 200 ரன்களைத் தொட்டது ஆர்.சி.பி. பெவிலியன் திரும்பும்போது கேப்டன் கோலி இறங்கி வந்து 'நமஸ்தே சாப்' என சர்ப்ராஸைப் பார்த்து கும்பிடு போடுவார். குட்டிப்பையனுக்கோ வெட்கம் அள்ளும். செம சீரியஸ் கோலியின் ஜாலி முகம் இது.

இதெல்லாம் சப்பை மேட்டர் பாஸ் :

கிரிக்கெட்

2012-ல் மும்பை - டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளுக்கெதிரான போட்டியில் வெறித்தனமாய் பவுலிங் வீசியிருப்பார் தென்னாப்பிரிக்க பவுலர் டேல் ஸ்டெயின். அவர் வீசும் முதல் பந்திலேயே மும்பை பேட்ஸ்மென் ரிச்சர்ட் லெவி காலி. அவுட்டாக்கிவிட்டு, 'இதெல்லாம் சப்பை மேட்டர், சால்ட் வாட்டர் பாஸ்' என பிட்ச் நடுவே கொட்டாவி விடுவார் ஸ்டெயின். தட் கெத்து... செம கலாய் செம கலாய்!

ஓட்டைக் கை பொல்லார்ட் : 

சென்னை 28-ல் ஒரே ஷாட்டை திரும்பத் திரும்ப அடிக்கும் மகராசன் இருப்பாரே... இந்த மும்பை - சென்னை மேட்ச்சில் அந்த கேரக்டர்தான் மைக் ஹஸ்ஸி. முதல் ஓவரின் கடைசி மூன்று பந்துகளையும் ஆஃப் சைடில் தட்டுவார். மூன்றுமே பொல்லார்ட் கைக்கு கேட்ச்சாக செல்லும். மூன்றையும் அழகாய் கோட்டை விடுவார் பொல்லார்ட். எப்போதாவதுன்னா பரவால்லை, எப்பவுமேன்னா எப்படி?' எனப் பரிதாபமாய் பார்ப்பார்கள் மும்பை ரசிகர்கள். அசடு வழிவார் பொல்லார்ட்.

போடு தகிட தகிட :

 

ஐ.பி.எல்லின் டப்பாங்குத்து மன்னன் பிராவோ என்பது ஊருக்கேத் தெரியும். ஆனால் பொலிங்கர்? 2011 ஃபைனலில் சாம்பியன் ஆன குஷியில் நம் ஊர் டப்பாங்குத்துக்கு முரட்டுக் குத்து குத்துவார் பிராவோ. திடீரென அவரோடு ஜோடி சேரும் பொலிங்கர் 'போடு தகிட தகிட' என ரோபோ ஷங்கர் டான்ஸ் ஆடுவார். மொழுமொழு பொலிங்கர் நம் ஊர் குத்துக்கு ஆடுவது... வாவ்டா மொமென்ட்!

இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? :

 

கிரிக்கெட் வரலாற்றின் மிக கேவலமான ரன் அவுட் இதுவாகத்தான் இருக்கும். ஹைதராபாத் அணியின் அமித் மிஸ்ராவுக்கு பந்து வீசுவார் ராஜஸ்தான் அணியின் ஃபவுல்க்னர். மிஸ்ரா தரையைத் தடவ, பந்தை எடுக்கும் கீப்பர் ரன் அவுட்டிற்கு முயற்சிப்பார். அது மிஸ்ஸாகி பவுலர் கைக்கே வரும். ஃபவுல்க்னர் மறுபடியும் ரன் அவுட்டிற்கு முயற்சி செய்ய, இந்த முறையும் மிஸ்ஸாகி திரும்ப கீப்பர் கைக்குப் போகும். இவ்வளவு களேபரம் நடக்கும்போதும் பொங்கல் சாப்பிட்ட மந்தத்தில் க்ரீஸுக்கு வெளியேதான் இருப்பார் மிஸ்ரா. 'இனியும் பொறுக்க முடியாது, போய்யா' எனக் கடைசியாக கீப்பர் ஸ்டம்ப்பை அடிக்க, தி எண்ட். ஏம்மா இதெல்லாம் ஒரு ரன் அவுட்டாமா?

- நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement