ஐபிஎல்: லின், கம்பீர் மிரட்டல்: கொல்கத்தா கலக்கல் வெற்றி! | ipl cricket match: win kolkata

வெளியிடப்பட்ட நேரம்: 23:26 (07/04/2017)

கடைசி தொடர்பு:23:25 (07/04/2017)

ஐபிஎல்: லின், கம்பீர் மிரட்டல்: கொல்கத்தா கலக்கல் வெற்றி!

ராஜ்கோட்டில் இன்று நடந்த ஐபிஎல் 10-வது சீசனின் மூன்றாவது போட்டியில், ரெய்னா தலைமையிலான  குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடஸின் புயல் வேக பேட்டிங்கில் விழுந்தது.

 

ஐபிஎல்: கொல்கத்தா வெற்றி

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர், பீல்டிங் எடுத்தார்.  20 ஓவர்களில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 47 ரன்களும், ரெய்னா ஆட்டம் இழக்காமல் 68 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களான கவுதம் கம்பீர் மற்றும் கிறிஸ் லின் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டினார்கள். குஜராத் அணி பந்துவீச்சாளர்களின் அத்தனை பந்துகளையும் அடித்து விளாசினார்கள். 14.5 ஓவரிலேயே  இலக்கை எட்டியது கொல்கத்தா. கிறிஸ் லின் 93 ரன்களும் கவுதம் கம்பீர்  76 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க