Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐபிஎல்: முதல் வெற்றியுடன் பெங்களூரு!

ஐபிஎல் பத்தாவது சீசனின் 5- வது போட்டி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி டேர்வெவில்ஸ் இடையே, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ஜாதவ் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியின் மோரிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

ஐபிஎல்- பெங்களூரு

158 ரன்கள் என்ற இலக்குடன் சேசிங் செய்த டெல்லி அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில், சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த அந்த அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன், ரிஷப் பாண்ட்   ( 57 ரன்கள்) ஆட்டமிழந்தார். முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் போட்டியில் ஹைதராபாத்திடம் தோற்றிருந்த பெங்களூரு அணி, இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ஆட்டநாயகன் விருதை பெங்களூரு அணியின் ஜாதவ் பெற்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement