'வார்னர் ஐபிஎல் 'தொடர் நாயகன்' விருதை வெல்வார்'- பான்டிங் கணிப்பு!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங், தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 'தொடர் நாயகன்' விருதை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி, 2016-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை கைப்பற்றியது. வார்னரும் கடந்த ஐபிஎல் சீசனில், 60.57 சராசரியில் 848 ரன்கள் எடுத்தார். 

ஆனால், சமீபத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் ட்ராஃபியில் வார்னர், 4 டெஸ்ட்களில் விளையாடி 193 ரன்கள் தான் எடுத்தார்.

இந்நிலையில் பான்டிங், 'கொஞ்சம் ஏமாற்றமளிக்கும் டெஸ்ட் தொடருக்கு பின்னர் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகிறார். அதுவும் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஒரு அணியின் கேப்டனாக களம் இறங்குகிறார். மேலும், அவர் ஒரு தொடக்க பேட்ஸ்மேனாக உள்ளார். இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒரு தொடக்க பேட்ஸ்மேனோ அல்லது ஒரு சுழற்பந்து வீச்சளரோ தான் 'தொடர் நாயகனாக' வருவார் என்று எதிர்பார்க்கிறேன். எனவே, வார்னருக்கு தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!