ஜான்டியின் குழந்தை இந்தியாவும், ஹர்பஜனின் குழந்தை ஹியானாவும் தான் தற்போது வைரல்!

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், ஹர்பஜன் சிங் தனது ஒரு வயது மகள் தென் ஆப்ரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸின் மகளுடன் விளையாடும் புகைப்படத்தை இன்று ட்விட்டரில் வெளியிட்டார். ஐ.பி.எல் போட்டிகள் மூலம் பிற நாட்டு வீரர்களுடனான உறவுகள் மேம்படுவதாக அவர் கூறியுள்ளார்.

hinaya

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கி அதிரடியாக பயணிக்க ஆரம்பித்துள்ளது. மற்ற போட்டிகளை போல் இல்லாமல் பொழுதுபோக்கு நிறைந்த போட்டியாக நடத்தப்படும் ஐ.பி.எல் போட்டிகளை வெளிநாட்டு வீரர்கள் அதிகமாகவே விரும்புகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் சுற்றுலாவை போல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்தியா வருவது வழக்கமாகியுள்ளன. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ஹர்பஜன் தனது மகள் ஹினாயா தென் ஆப்ரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸின் மகள் இந்தியா ரோட்ஸுடன் விளையாடி மகிழும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது அனைவரும் ஒன்று கூடும் தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் ஜான்டி ரோட்ஸ் இந்தியாவை அதிகம் விரும்பியதால் தனது மகளுக்கு இந்தியா ரோட்ஸ் என பெயரிட்டது குறிப்பிடத்தக்கது. ஜான்டி ரோட்ஸ் தனது மகளுக்கு, ’இந்தியா’ என்று பெயரிட்டதால், அந்த சுட்டி குழந்தை முன்னரே ட்ரெண்டாகிவிட்டது. தற்போது ஹர்பஜன் குழந்தையுடன் விளையாடும் புகைபடம் வெளியாகி மிண்டும் ஒருமுறை ட்ரெண்டாகிவிட்டாள் இந்தியா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!