சன்ரைஸர்ஸ்க்கு 136 ரன்கள் இலக்கு

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்- குஜராத் இடையிலான ஆட்டத்தில் 20 ஓவர் முடிவுக்கு 135 எடுத்துள்ளது குஜராத் லயன்ஸ் அணி. இதையடுத்து 136 ரன்களை இலக்காக கொண்டு சான்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது.


 

ஐ.பி.எல் போட்டிகளின் 6-வது போட்டி ஹைதராபாத் குஜராத் அணிகளுக்கிடையில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. முக்கிய வீரர்களாக எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா, மெக்குல்லம் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர்.


அதிகபட்சமாக டுவேய்ன் ஸ்மித் 37 ரன்களும் ஜேசன் ராய் 31 ரன்களும் எடுத்துள்ளனர். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் குவித்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் 19 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் ஆஷிஷ் நெஹ்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து 136 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்குகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். வார்னர், தவான், யுவராஜ் உள்ளிட்ட அதிரடி ஆட்டக்காரர்களை வீழ்த்தி வெற்றிபெறும் முனைப்பில் பந்து வீசவிருக்கிறது குஜராத் லயன்ஸ்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!