Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ்: வெடிக்கும் மோதல்

டேவிஸ் கோப்பை தொடரில், உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும், மகேஸ் பூபதி, லியாண்டர் பயஸ் இடையே மோதல் வலுத்து வருகிறது. டேவிஸ் கோப்பைத் தொடரில் லியாண்டருக்குப் பதிலாக, போபண்ணாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் பூபதி. இந்நிலையில், டேவிஸ் கோப்பை தொடரில் அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து, பூபதியுடன் லியாண்டர் வாட்ஸ்அப்பில் விவாதித்துள்ளார்.

Mahesh Bhupathi, Leander Paes


இதையடுத்து, அந்த உரையாடலை, மகேஸ் பூபதி சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, லியாண்டர் பயஸ் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், டேவிஸ் கோப்பையில் அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்து பூபதிக்கு பதிலடி கொடுத்தார். 


இந்நிலையில், அகில இந்திய டென்னிஸ் சங்கம், "மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் இருவரும் மூத்த வீரர்கள். இந்த விவகாரத்தில் இருவரும் சற்று முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளது. மேலும், இதுதொடர்பாக பயஸ், பூபதி ஆகிய இருவருடனும் பேச உள்ளதாகவும் அகில இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement