வெளியிடப்பட்ட நேரம்: 07:28 (11/04/2017)

கடைசி தொடர்பு:07:47 (11/04/2017)

பெண்கள் உலக ஆக்கி லீக் : இரண்டாவது சுற்றின் சாம்பியன் ஆனது இந்திய அணி!!

பெண்கள் உலக ஆக்கி லீக் போட்டியின் இரண்டாவது சுற்றில் (Women’s Hockey World League Round 2),  இந்திய அணி பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் ( shootout) சிலியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளது.  இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, பெல்ஜியத்தில் ஜூன் 21-ம் தேதி தொடங்கும் பெண்களுக்கான உலக ஆக்கி தொடரின் அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. 

Women indian hockey team

பெண்கள் உலக ஆக்கி லீக்கின் ரவுண்ட் 2 போட்டியின் இறுதி சுற்று நேற்று கனடாவில் நடைபெற்றது. ரவுண்ட் 2வின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, சிலியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில்  பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீராங்கனை அனுபமா பார்லா கோல் அடித்தார். ஆனாலும் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலை வகித்தன. இதனால்  ‘பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. ஷூட்-அவுட் முறையை தங்களக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது இந்திய அணி. ஆட்ட முடிவில், 3-1 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி, ரவுண்ட் 2-வின்  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடரின் சிறந்த கோல்கீப்பர் விருதை இந்திய அணியின் கோல் கீப்பர் சவிதா புனியா பெற்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க