வெளியிடப்பட்ட நேரம்: 22:13 (12/04/2017)

கடைசி தொடர்பு:22:12 (12/04/2017)

#IPL மும்பை இந்தியன்ஸ்க்கு 159 ரன்கள் இலக்கு

இந்த ஐபிஎல் சீஸனின் பத்தாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 158 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் அட்டகாசமாய் ஆரம்பித்து அதிரடியாய் பயணிக்கத் தொடங்கிவிட்டன. இன்றைய போட்டியில் அதிரடிகளுக்கு பஞ்சம் வைக்காத சன்ரைசர்ஸ் அணியும், முன்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச, வார்னர்-தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் குஜராத் அணியை அசால்டாக வீழ்த்திய சன்ரைசர்ஸ், மும்பையை வீழ்த்தும் வியூகங்களை வகுத்து களமிறங்கியுள்ளது. மேலும், தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இருக்கும் சன்ரைசர்ஸை எப்படியாவது வென்றுவிட வேண்டுமென களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ். முன்பை அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. சன்ரைசர்ஸ் தரப்பில் ஹென்ரிக்ஸ்க்கு பதிலாக கடந்த சீசனில் கலக்கிய முஷ்டபிஸுர் களமிறங்கினார்.

20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 49 ரன்கள் குவித்தார். ஷிகர் தவான் 48 ரன்கள் குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லரும், பார்திவ் படேலும் களமிறங்குகின்றனர்.