தோனியை அவமதித்த புனே அணி... உரிமையாளருக்கு சாக்‌ஷி பதிலடி! | Sakshi Dhoni's Fitting Reply To Rising Pune Supergiant Owners

வெளியிடப்பட்ட நேரம்: 01:56 (13/04/2017)

கடைசி தொடர்பு:09:35 (13/04/2017)

தோனியை அவமதித்த புனே அணி... உரிமையாளருக்கு சாக்‌ஷி பதிலடி!

புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி அண்மையில் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸமித், அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், முதல் ஆட்டத்தில் புனே அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

வெற்றியை அடுத்து, புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சகோதரர் ஹர்ஷ் கோயங்கா, தோனியைக் குறை கூறும் வகையில் ஸ்டீவன் ஸ்மித்தைப் புகழ்ந்து, ஒரு ட்விட் செய்திருந்தார். அதில், 'ஸ்டீவன் சிங்கம் என்று நிரூபித்துள்ளார். தோனியை மிஞ்சி விட்டார். ஸ்டீவனை கேப்டனாக்கியது நல்ல முடிவு' எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்த போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் புனே அணி தோல்வியடைந்தபோது, புனே வீரர்களின் சராசரியை 'ஸ்கிரீன் ஷாட் ' எடுத்து, மற்றொரு ட்விட் செய்தார். ஸ்டீவனின் சராசரியாக இரு போட்டிகளில் 110, தோனி இரு போட்டிகளில் 17. 

ஹர்ஸ் கோயங்காவின் ட்விட்டுக்கு தோனி எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஆனால், சாக்‌ஷி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாவில், சென்னை அணியின்  ஹெல்மெட் அணிந்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, ஹர்ஷ் கோயங்காவை கடுமையாகத் தாக்கிப் பதிவிட்டுள்ளார். அதில், 'பறவை உயிருடன் இருக்கும்போது, புழுக்களைச் சாப்பிடும். உயிர் போனால், புழுக்கள் பறவையைச் சாப்பிடும்'. எந்தச் சமயத்திலும் சூழல் மாறும். அதற்காக, ஒருவரை குறைத்து மதிப்பிட வேண்டாம். காயப்படுத்த வேண்டாம். நீங்கள் வேண்டுமானால் இப்போது சக்தி வாய்ந்தவராக இருக்கலாம். ஆனால், காலம் உங்களை விட சக்தி வாய்ந்தது. ஒரு மரத்தில் இருந்து லட்சம் தீக்குச்சிகளை உருவாக்க முடியும்.  மரத்தை அழிக்க ஒரு தீக்குச்சி போதும். அதனால், நல்லதையே பேசுங்கள்... நல்லதையே செய்யுங்கள் '' எனப் பதிலடி கொடுத்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க