வெளியிடப்பட்ட நேரம்: 02:39 (13/04/2017)

கடைசி தொடர்பு:09:30 (13/04/2017)

'தோனி அதுக்கு சரிபட்டு வர மாட்டார்' - கங்குலி

ஐபிஎல் போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் தடைக்குப் பிறகு, தோனி புனே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த சீசனில் ஸ்டீவன் ஸ்மித் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன்மூலம், ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இல்லாமல், தோனி, இந்த சீசனில் ஒரு சராசரி வீரராகக் களமிறங்கியுள்ளார்.

Ganguly


குறிப்பாக, இந்த சீசனிலும் தோனி தற்போது வரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளில், 12, 5, 11 ரன்கள்தான் எடுத்துள்ளார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் குவிந்துவருகின்றன.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, "ஒரு நாள் போட்டிகளில், தோனி சிறந்த வீரர்தான் அதில் சந்தேகமே இல்லை. ஆனால், டி-20 போட்டிகளில் அவர் சிறந்த வீரர் என்று கூற முடியாது. டி-20 போட்டிகளில், கடந்த பத்து ஆண்டுகளில், ஒரே ஒரு அரை சதம்தான் அடித்துள்ளார். அது ஒரு சிறந்த சாதனை இல்லை" என்று கூறியுள்ளார்.

அதேபோல ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் க்ளார்க்கும், தோனி ரன் குவிப்பில் ஈடுபட்டே ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.