சாம்பியன்ஸ் லீக்: பேயர்னை வீழ்த்தியது ரியல் மாட்ரிட் | Real Madrid won 2-1 at Bayern Munich

வெளியிடப்பட்ட நேரம்: 02:33 (13/04/2017)

கடைசி தொடர்பு:09:27 (13/04/2017)

சாம்பியன்ஸ் லீக்: பேயர்னை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்

சாம்பியன்ஸ் லீக் காலிறுதி முதல் லெக் ஆட்டத்தில் மியூனிச் நகரில் இன்று ரியல் மாட்ரிட் அணியை பேயர்ன் அணி எதிர்கொண்டது. போட்டியைக் காண ஏலியன்ஸ் அரீனா மைதானம், ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. முதல்பாதியில், பேயர்ன் கோல் அடித்து முன்னிலை பெற்றது. 25-வது நிமிடத்தில் விடல், பேயர்னுக்கான கோலை அடித்தார்

தொடர்ந்து, 47-வது நிமிடத்தில் ரியல்மாட்ரிட்டின் ரொனால்டோ பதில் கோல் திருப்பினார்.  ஆட்டம் சமன் அடைந்ததைத் தொடர்ந்து, பிற்பாதியில் அனல் பறந்தது. ரொனால்டோ 77-வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடிக்க, ரியல் முன்னிலை பெற்றது.  இறுதிவரை பேராடிய பேயர்ன் வீரர்களால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. ரியல்மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இரண்டாவது லெக் ஆட்டம் அடுத்த புதன்கிழமை நடைபெற உள்ளது.

லியோசெஸ்டர் மற்றும் அத்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கிடையேயான மற்றொரு ஆட்டத்தில் அத்லெடிகோ மாட்ரிட் அணி ஒரு கோல் அடித்து வெற்றிபெற்றது. கிரீஸ்மேன் அடித்த கோல், அத்லெடிகோவின் வெற்றிக்கு உதவியது. அடுத்த வாரம் நடைபெறவுள்ள இரண்டாவது லெக் ஆட்டத்தில், இரு அணிகளும் மீண்டும் மோதுகின்றன. போர்சியா டோர்ட்மன்ட் மொனாக்கோ அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க