வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (14/04/2017)

கடைசி தொடர்பு:19:44 (14/04/2017)

சிங்கப்பூர் ஓபன்: காலிறுதியிலேயே வெளியேறிய பி.வி.சிந்து!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி. சிந்து காலிறுதியிலேயே வெளியேறினார்.

சிந்து

 

சர்வதேச அளவில் நட்சித்திரப் போட்டியாளர்கள் பங்குபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் அபாரமாக ஆடி வந்தார் இந்தியாவின் முன்னணி நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து. 

இன்று நடந்த காலிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்த்துப் போட்டியிட்டார் உலகின் நம்பர் 2 வீரங்கனை சிந்து. முதல் செட்டில் 11-21 என ஆட்டத்தை இழந்த சிந்து, இரண்டாவது செட்டையும் 15-21 என்ற கணக்கில் இழந்தார். 

இதனால், காலிறுதிப் போட்டியிலேயே ஆட்டமிழந்த சிந்து சிங்கப்பூர் தொடரிலிருந்தே வெளியேறினார்.