வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (14/04/2017)

கடைசி தொடர்பு:18:53 (14/04/2017)

#IPL10 மும்பை இந்தியன்ஸ் தடுமாற்றம், சாமுவேல் பத்ரி ஹாட்ரிக்!

பெங்களூர் உடனான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அடுத்தடுத்த ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பெங்களூர் அணியின் சாமுவேல் பத்ரி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

பெங்களூர் - மும்பை மோதும் ஐபிஎல் போட்டியின் முதல் இன்னிங்ஸை ஆடிய, பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்று கம்-பேக் கொடுத்த கேப்டன் கோலி மட்டும் 47 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். முக்கிய வீரர்களாக எதிர்பார்க்கப்பட்ட கெயில், டி வில்லியர்ஸ் உள்ளிட்டோர் மிக நிதானமாக விளையாடினர். மும்பை தரப்பில் மெக்லெனேகன், அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தயன்ஸ் தற்போது ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

குறைந்த இலக்கை தற்காத்து ஆடவேண்டிய நிலையில் இருக்கும் பெங்களூருக்கு, சாமுவேல் பத்ரி மலை போல் உதவியிருக்கிறார். ஆட்டத்தின்  இரண்டாவது ஓவரிலேயே தனது சூழலால் பார்திவ் பட்டேல் மற்றும் மேக்லனகனை வீழ்த்தியதோடு நில்லாமல் மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவையும் கிளீன் போல்ட் ஆக்கியுள்ளார் சாமுவேல் பத்ரி.  இந்த ஐபிஎல் தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட் இதுவாகும். மேலும் நிதானமாக ஆடி வந்த ரானாவையும் அவர் வீழ்த்தியுள்ளார். இதையடுத்து குருனல் பாண்டியாவும் பொல்லார்டும் ஆடி வருகின்றனர். திடீர் விக்கெட் வீழ்ச்சியையடுத்து இவர்கள் நிதானமான ஆட்டத்தை ஆடி வருகின்றனர்.