டிவில்லியர்ஸுக்கு புதிய பட்டம் என்ன தெரியுமா..? | De villiers is the 'scariest batsman on planet'

வெளியிடப்பட்ட நேரம்: 22:24 (14/04/2017)

கடைசி தொடர்பு:23:43 (14/04/2017)

டிவில்லியர்ஸுக்கு புதிய பட்டம் என்ன தெரியுமா..?

கடந்த 10-ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடிய ஐபிஎல் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ஒரு நாள் அணி கேப்டன் டிவில்லியர்ஸ் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து இந்த ஐபிஎல் சீசனுக்கு கச்சிதமான கம்-பேக் கொடுத்தார்.

அந்தப் போட்டியில் மொத்த பெங்களூர் அணியும் சொதப்பிய போது, பஞ்சாப் அணி பவுலர்களின் பந்துகளை நாலா பக்கமும் தெறிக்கவிட்டார் டிவில்லியர்ஸ்.

ஏற்கெனவே, டிவில்லியர்ஸின் ஆல்-ரவண்டு ஷாட்களுக்காக, அவரை 'Mr.360' என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆலன் டொனால்ட், 'நான் விளையாடியபோது பல திறமைமிக்க பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசி உள்ளேன். ஆனால், டிவில்லியர்ஸ்தான் நான் பார்த்ததிலேயே இந்த கிரகத்தின் 'மிக பயங்கரமான வீரர்'' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.